தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நடிகை ஜெயசுதா தோல்வி: நடிகர் ராஜேந்திர பிரசாத் வெற்றி

Bookmark and Share

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நடிகை ஜெயசுதா தோல்வி: நடிகர் ராஜேந்திர பிரசாத் வெற்றி

தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 29–ந்தேதி தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதாவும், நடிகர் ராஜேந்திர பிரசாத்தும் போட்டியிட்டனர். ஜெயசுதாவுக்கு ஏற்கனவே இச்சங்கத்தில் தலைவராக இருந்த தெலுங்குதேச எம்.பி. முரளிமோகன் ஆதரவு தெரிவித்து இருந்தார்.

ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர். அரசியல் ரீதியாக இந்த மோதல் மாறியது. எனவே தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நடிகர் கல்யாண் ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்தலாம் என்றும் அந்த தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கும் படியும் தெரிவித்தார். கோர்ட்டு நிபந்தனைபடி கடந்த மாதம் 29–ந்தேதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கல்யாண் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோர்ட்டு தடை நீங்கியதால் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டது. மொத்தம் உள்ள 702 ஓட்டில் 394 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இதில் ராஜேந்திர பிரசாத் 85 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜேந்திரன பிரசாத் 237 ஓட்டுகள் பெற்று இருந்தார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயசுதாவுக்கு 152 ஓட்டுகளே கிடைத்தது. செயலாளர் மற்றும் 5 பதவிகளுக்கான தேர்தலிலும் ராஜேந்திர பிரசாத் அணியே வெற்றி பெற்றது.

 


Post your comment

Related News
இன்று ஒரு ஸ்பெஷல் டே- ஆனால் கணவர் இல்லாத சோகத்தில் நடிகை
நடிகை ஜெயசுதாவின் கணவர் ஏன், எப்படி தற்கொலை செய்து கொண்டார்?: கண்டுபிடித்த போலீஸ்
நடிகை ஜெயசுதா கணவரின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?
நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை! காரணம் இதுதானா?
தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஜெயசுதா
அன்று லட்சம்...இன்று கோடி...!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions