தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஜெயசுதா

Bookmark and Share

தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஜெயசுதா

சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் அறிமுகமாகி கருப்பு வெள்ளை திரைப்படங்களின் கனவு கன்னியாக இருந்தவர் ஜெயசுதா. அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், போன்ற காலத்தால் அழியாத படங்களில் நடித்தார்.

தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயசுதா தற்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் அவர் கடைசியாக 1977 என்ற படத்தில் நடித்தார். இது 2009ம் ஆண்டு வெளிவந்தது. தற்போது 6 வருட இடைவெளிக்கு பிறகு இப்போது ரீ-என்ட்ரி ஆகிறார்.

மகேஷ்பாபு, சமந்தா காஜல் அகர்வால் நடிக்கும் பிரமோத்சவம் என்ற படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இதில் முக்கிய கேரக்டரில் ஜெயசுதா நடிக்கிறார். அவருடன் ரேவதி, நரேஷ், என தெலுங்கு தமிழ் நடிகர்கள் கலந்து நடிகிறார்கள். பிவிபி நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. ரத்னவேல் ஒளிப்பதிவு செய்கிறார் மிக்கி மேயர் இசை அமைக்கிறார். ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.

தெலுங்கு யங் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுக்கு அவரது டப்பிங் படங்கள் மூலம் இங்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதனை விரிவுபடுத்தவே இந்தப் படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. வருகிற பொங்கல் விருந்தாக படத்தை வெளியிட பிவிபி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.


Post your comment





Related News
இன்று ஒரு ஸ்பெஷல் டே- ஆனால் கணவர் இல்லாத சோகத்தில் நடிகை
நடிகை ஜெயசுதாவின் கணவர் ஏன், எப்படி தற்கொலை செய்து கொண்டார்?: கண்டுபிடித்த போலீஸ்
நடிகை ஜெயசுதா கணவரின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?
நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை! காரணம் இதுதானா?
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் நடிகை ஜெயசுதா தோல்வி: நடிகர் ராஜேந்திர பிரசாத் வெற்றி
அன்று லட்சம்...இன்று கோடி...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions