ஜீத்து ஜோசப் டைரக்சனில் நயன்தாரா..!

Bookmark and Share

ஜீத்து ஜோசப் டைரக்சனில் நயன்தாரா..!

ஜீத்து ஜோசப் இயக்கி, திலீப் ஹீரோவாக நடித்துள்ள லைப் ஆப் ஜோஸுட்டி படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார்.. அவர் கலந்துகொண்ட படப்பிடிப்பையும் சமீபத்தில் நடத்தி முடித்துவிட்டார்கள்.

மிகவும் சைலண்ட்டாக நடந்திருக்கும் இந்த விஷயத்தை பற்றித்தான் இப்போது மலையாள திரையுலகில் ஆச்சர்யம் விலகாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. மம்முட்டியுடன் நடித்த  பாஸ்கர் தி ராஸ்கல்  படத்தை தொடர்ந்து நயன்தாரா மலையாளத்தில் நடிக்கும் அறிகுறியோ, அறிவிப்போ எதுவும் இல்லாததால் இது எப்படி நடந்தது என்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.

ஜீத்து ஜோசப்பின் டைரக்சனில் நயன்தாரா நடிப்பது முதல்முறை தான் என்றாலும் திலீப்புடன் நடிப்பது இரண்டாவது முறை.. பாடிகார்ட் படத்தில் ஏற்கனவே ஹிட்டடித்த ஜோடிதான் இது.

இந்த புதிய படத்தில் ஏற்கனவே ரட்சனா நாரயணன்குட்டி மற்றும் ஜோதி கிருஷ்ணா என இரண்டு கதாநாயகிகள் இருக்கும்போது இதில் நயன்தாராவின் கதாபாத்திரம் என்ன, பாடல் காட்சியில் மட்டும் நடிக்கிறாரா, இல்லை கெஸ்ட் ரோலில் வந்து போகிறாரா என்பது பற்றியெல்லாம் படக்குழுவினர் மூச் விட மறுக்கிறார்கள்.

நயன்தாரா சமபந்தப்பட காட்சிகள் படமாக்கப்பட்டபோது வெளிநபர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்காமல் படு ஸ்ட்ரிக்ட்டாக படப்பிடிப்பை நடத்தியுள்ளார்களாம்.


Post your comment





Related News
பள்ளியிலிருந்தே விஜய்யின் மதம் இதுதான் - விஜய்யின் தந்தை ஓபன்டாக் !
ஜீத்து ஜோசப் சொல்லாத ரகசியம்!
“ஜீத்து ஜோசப் காப்பியடிக்கவில்லை” - உயர்நீதிமன்றம் \'பளிச்\' தீர்ப்பு..!
\'பிகே\' தமிழில் ரீமேக் ஆகிறதா? டைரக்டர் பதில்
\'பி.கே\' ரீமேக்கில் கமலுடன் மீண்டும் இணையும் ஜீத்து ஜோசப்..?
திலீப்பின் டைமிங் காமெடியால் பலமுறை ரீடேக் வாங்கிய நடிகை..!
நடிகை உதயதாரா திருமணம்:திரையுலக பிரமுகர்கள் பங்கேற்ப்பு
நடிகை உதயதாராவுக்கு மே 16-ம் தேதி திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions