“ஜீத்து ஜோசப் காப்பியடிக்கவில்லை” - உயர்நீதிமன்றம் 'பளிச்' தீர்ப்பு..!

Bookmark and Share

“ஜீத்து ஜோசப் காப்பியடிக்கவில்லை” - உயர்நீதிமன்றம் 'பளிச்' தீர்ப்பு..!

மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் ஹிட்டானாலும் ஆனது, பிரச்சனைகளும் அந்தப்படத்தை சுற்றி சுற்றி சுழன்று அடிக்க தவறவில்லை. படம் அந்த அளவிற்கு அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருந்தாலும் படம் வெளியானபோதே, திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பி.விஜயன் மட்டும் இந்தப்படம் சரியான ஒரு செய்தியை சொல்லவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூரோ நாங்கள் இந்தியில் படமாக்க வாங்கி வைத்திருக்கும் ஜப்பானிய நாவலின் கதையைப் போலவே 'த்ரிஷயம்' படம் இருப்பதால் அதன் இந்தி ரீமேக்கிற்கு தடைவிதிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த பரபரப்புகள் ஓய்வதற்குள் மலையாள இயக்குனரான சதீஷ் பால் என்பவர் 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கிற்கு தடைவிதிக்கவேண்டும் என கேரளா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

காரணம் தான் இயக்கிய 'ஒரு மழக்காலத்து' படத்தின் கதையும் த்ரிஷயத்தின் கதையும் ஒரே தளத்தில் அமைந்துள்ளது என்றும் தனது படத்தை தமிழில் 'க்ரைம் த்ரில்லர்' என்ற பெயரில் தான் ரீமேக் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும், அதனால் அதேபோன்ற கதை அமைப்புடன் உள்ள 'த்ரிஷ்யம்' படத்தை தமிழில் ரீமேக் செய்யக்கூடாது என்றும் அதில் கூறிஇருந்தார்.

தெலுங்கு, கன்னட மொழிகளில் எல்லாம் 'த்ரிஷ்யம்' ரீமேக்காகும் வரை பொறுமையாக இருந்துவிட்டு, தமிழில் அதன் ரீமேக்கிற்காக கமலை வைத்து பூஜையெல்லாம் போட்ட பிறகு இந்த சதீஷ்பால் திடீரென வழக்கு தொடுத்ததன் பின்னணி என்ன.?

ஆனால் இதையெல்லாம் ஆராய்வதற்குள் ஒரு வழியாக வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பும் வெளியாகிவிட்டது. அந்த தீர்ப்பில், “மனுதாரர் குறிப்பிட்டுள்ளதுபோல த்ரிஷ்யம் படம் அவரது கதையில் இருந்து காப்பியடிக்கப்படவில்லை” என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உயர்நீதிமன்றம்.


Post your comment





Related News
பள்ளியிலிருந்தே விஜய்யின் மதம் இதுதான் - விஜய்யின் தந்தை ஓபன்டாக் !
பிரபல நடிகரை தாக்கிய மர்ம நபர்கள்- பார்வை இழக்கும் நிலைமையில் நடிகர்
ஜீத்து ஜோசப் டைரக்சனில் நயன்தாரா..!
ஜீத்து ஜோசப் சொல்லாத ரகசியம்!
\'பிகே\' தமிழில் ரீமேக் ஆகிறதா? டைரக்டர் பதில்
\'பி.கே\' ரீமேக்கில் கமலுடன் மீண்டும் இணையும் ஜீத்து ஜோசப்..?
திலீப்பின் டைமிங் காமெடியால் பலமுறை ரீடேக் வாங்கிய நடிகை..!
நடிகை உதயதாரா திருமணம்:திரையுலக பிரமுகர்கள் பங்கேற்ப்பு
நடிகை உதயதாராவுக்கு மே 16-ம் தேதி திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions