ராஜேஷ்.எம் இயக்கத்தில் மீண்டும் ஜீவா!

Bookmark and Share

ராஜேஷ்.எம் இயக்கத்தில் மீண்டும் ஜீவா!

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ்.எம். அதையடுத்து பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களை இயக்கியவர் இப்போது ஆர்யா-சந்தானம் நடிப்பில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படததை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், தனது முதல் படமான சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஜீவாவைக்கொண்டு அடுத்தபடியாக ஒரு படம் இயக்குகிறாராம் ராஜேஷ்.எம். அந்த படத்தை தற்போது புலி படத்தை தயாரித்து வரும் விஜய்யின் பிஆர்ஓவான பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறாராம்.

இந்த செல்வகுமார்தான் ஜீவாவுக்கும் பிஆர்ஓவாக இருந்து வருகிறார். மேலும், ராஜேஷ்.எம் படங்கள் காமெடி கலந்து ஜனரஞ்சகமாக இருக்கும் என்றபோதும் ஜீவா நடிக்கும் படத்தை ஒரு அழுத்தமான கதைக்களத்தில் உருவாக்குகிறாராம்.

அதோடு, இந்த படத்தில் ஜீவாவுடன் சில முக்கிய காமெடியன்களை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. தற்போது ஜீவா நடித்து வரும் திருநாள், கவலை வேண்டாம் படங்களை அடுத்து இப்பட வேலைகள் தொடங்குகிறதாம்.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
மீண்டும் விஜய்யுடன் இணைகிறேன் - உறுதிப்படுத்திய ஜீவா
பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’
அடுத்த கட்டத்தில் `கலகலப்பு-2'
படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?
லொள்ளு சபா ஜீவாவுக்காக ரஜினி செய்த காரியம்
ஈழத் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது! - நடிகர் ஜீவா
ஜீவாவை பிளேடு வைத்து மிரட்டும் நயன்தாரா!
ஜீவாவின் ஜெமினி கணேசன்
ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions