அட்லியுடன் கைகோர்க்கும் ஜீவா?

Bookmark and Share

அட்லியுடன் கைகோர்க்கும் ஜீவா?

அட்லி காட்டில் இப்போது அடை மழை என்றுதான் சொல்லவேண்டும். ‘ராஜாராணி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். கிரைம், திரில்லராக உருவாகி வரும் இப்படத்திற்காக விஜய் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.

இரண்டாவது படத்திலேயே விஜய்யை வைத்து இயக்குவது அட்லிக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. விஜய் படத்தை இயக்கும் நேரத்தில் அட்லிக்கு இன்னொரு வாய்ப்பும் தேடி வந்துள்ளது.

அதாவது, ஜீவா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அட்லி திரைக்கதை எழுதவிருப்பதாக கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ செய்தி இல்லையென்றாலும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. புதுமுக இயக்குனர் அந்த படத்தை இயக்கவிருக்கிறாராம்.

ஜீவா, தற்போது ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அட்லி திரைக்கதை எழுதும் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அட்லி, தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘கெட்ட பையன்டா இந்த கார்த்தி’ என்ற படத்திற்கு வசனம் எழுதி வருகிறார். இப்படத்தை இயக்குனர் சங்கரின் உதவியாளர் குணா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions