ஜீவாவுக்கு ஜோடியான ஹன்சிகா?

Bookmark and Share

ஜீவாவுக்கு ஜோடியான ஹன்சிகா?

ஜீவா தற்போது ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

தற்போது, இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் காமெடி, காதல் என இரண்டும் கலந்து உருவாகவிருக்கிறது.

இப்படத்தில் ஹன்சிகா, மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக வருகிறாராம். மேலும், இவருடைய கதாபாத்திரம் நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கும் எனவும் கூறுகின்றனர். 

ஹன்சிகா தற்போது ‘அரண்மனை-2’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஜீவாவும் மேலே சொன்ன இரண்டு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு, ராம்பிரகாஷ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பார்கள் என தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதம் தொடங்கப்போவதாகவும் தெரிய வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions