ராம் பிரகாஷின் இயக்கத்தில், ஜீவாவின் புதிய படம்!

Bookmark and Share

ராம் பிரகாஷின் இயக்கத்தில், ஜீவாவின் புதிய படம்!

கடந்த மாதங்களில் வெளியான படங்களில் சற்றே வித்தியாசமாக கதைஅம்சம் கொண்ட படம் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும். படத்தின் தலைப்பு போலவே கதை அம்சமும் வித்தியாசமாக இருந்தது. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் வாங்கி வெளியிட்டதால் வெற்றிப்படமாக அமைந்தது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் இயக்குனர் ராம் பிரகாஷ் அடுத்து இயக்கும் படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். 

யான் படத்தின் படுதோல்விக்குப் பிறகு ஜீவாவை யாருமே இயக்கவில்லை. எனவே வேறு வழியில்லாமல் தன் மானேஜர் பெயரில் அவரே திருநாள் படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார்.

கருணாஸ் ஹீரோவாக நடித்த அம்பா சமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் திருநாள் படத்தை இயக்குகிறார். தனக்கு பிரேக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரிய சம்பளம் கொடுத்து நயன்தாராவை தனக்கு ஜோடியாக்கி உள்ளார் ஜீவா. திருநாள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜீவா, அடுத்து யாமிருக்க பயமே டீகேயின் இயக்கத்தில் கவலை வேண்டாம் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்த இரண்டு படங்களை அடுத்து தற்போது தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இயக்குனர் ராம் பிரகாஷ் இயக்கத்திலும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் ஜீவா. திருநாள், கவலை வேண்டாம் படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்ததும் இப்படத்திற்கான வேலைகள் துவங்குமாம். ஆக்ஷன், காமெடி கலந்த இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது.


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions