கன்னட ரீமேக்கில் நடிக்கும் ஜீவா?

Bookmark and Share

கன்னட ரீமேக்கில் நடிக்கும் ஜீவா?

‘யான்’ படத்திற்குப் பிறகு ஜீவா ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே இயக்குகிறார். இது நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தையடுத்து ராம்நாத் இயக்கும் ‘திருநாள்’ படத்தில் ஜீவா நடிக்க இருக்கிறார். ராம்நாத் ஏற்கனவே கருணாசை வைத்து ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ என்னும் படத்தை இயக்கியவர். இப்படம் காமெடி படமாக உருவாகியிருந்தது. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

தற்போது கன்னட ரீமேக் படம் ஒன்றிலும் ஜீவா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் ‘கிருஷ்ண லீலா’ என்னும் படம் சமீபத்தில் வெளியானது. இதில் அஜய் ராவ் நாயகனாகவும் மயூரி நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.

ஷஷான்க் இயக்கியிருந்த இப்படத்தை அஜய் ராவ் தயாரித்திருந்தார். வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் ரீமேக் உரிமையை ஜீவாவின் தந்தையான ஆர்.பி. சௌத்ரி வாங்கியுள்ளார்.

இப்படம் விரைவில் ரீமேக் ஆகும் என்றும் இதில் ஜீவா நாயகனாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions