ரஜினிகாந்தின் ஜானி பட மறு தயாரிப்பில் நடிப்பேன்: நடிகர் ஜீவன் பேட்டி

Bookmark and Share

ரஜினிகாந்தின் ஜானி பட மறு தயாரிப்பில் நடிப்பேன்: நடிகர் ஜீவன் பேட்டி

ரஜினிகாந்த்-ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1980-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம், ‘ஜானி’. மகேந்திரன் டைரக்டு செய்து இருந்தார்.

‘என் வானிலே ஒரே வென்ணிலா, ஆசைய காத்துல தூதுவிட்டு, காற்றில் எந்தன் கீதம், ஒரு இனிய மனது போன்ற இனிமையான பாடல்கள் அந்த படத்தில் இடம்பெற்றன. ‘ஜானி’ படத்தை மீண்டும் தயாரித்தால் அதில் நடிக்க விருப்பம் இருப்பதாக நடிகர் ஜீவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- 

நான் ஏற்கனவே ஜெமினிகணேசனின் ‘நான் அவனில்லை’ படத்தை மீண்டும் தயாரித்தபோது அதில் நடித்தேன். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. அடுத்து ரஜினிகாந்தின் ‘ஜானி’ படத்தை மீண்டும் தயாரித்தால் அதில் நடிக்க விரும்புகிறேன். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறேன். தற்போது ‘அதிபர்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறேன். 

இந்த படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு திரும்பி கட்டுமான தொழில் செய்ய முயற்சிக்கும் இளைஞனை ஒருவன் ஏமாற்றி சொத்துக்களைப் பறித்து ஜெயிலுக்கு அனுப்புவதும், பிறகு அதில் இருந்து அவன் மீண்டு திரும்பவும் வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறான் என்பதும் கதை. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. 

நாயகியாக வித்யா நடித்துள்ளார். சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். சூர்யபிரகாஷ் டைரக்டு செய்துள்ளார். ஏற்கனவே ‘திருட்டு பயலே, காக்க காக்க’ படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தேன். இனிமேல் வில்லன் வேடங்களில் நடிக்கமாட்டேன். 

இவ்வாறு ஜீவன் கூறினார்.


Post your comment





Related News
படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?
மீண்டும் நான் அவனில்லை ஜீவன்!
வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை
ஜீவனின் ‘அதிபர்’
‘ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஜீவன்
ஜெயிக்கிற குதிரையில் மீண்டும் ஏறினார் ஜீவன்!
என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள்: நடிகர் ஜீவன் கவலை -
நெகட்டிவ் ஹீரோ கதை தேடும் ஜீவன்!
தூசு தட்டப்படும் ஜீவன் படங்கள்!
காமெடிக்கு மாறிய ஜீவன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions