மீண்டும் நான் அவனில்லை ஜீவன்!

Bookmark and Share

மீண்டும் நான் அவனில்லை ஜீவன்!

கெளதம்மேனன் இயக்கிய காக்கா காக்க படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ஜீவன். அதையடுத்து சுசிகணேசன் இயக்கிய திருட்டுப்பயலே படத்தில் ஹீரோவானார். பின் நான் அவனில்லை. மச்சக்காரன், தோட்டா, நான் அவனில்லை-2 என பல படங்களில் ஹீரோவாக நடித்தார். 

பின்னர் கவிதாலயா தயாரிப்பில் அவர் நடித்த கிருஷ்ணலீலை படம் வெளிவர முடியாமல் சிக்கிக்கொண்டு பின் அந்த படத்தோடு ஜீவனின் மார்க்கெட்டும் சரிந்தது.

அதனால் சில வருடங்களாக படவாய்ப்புகள் இல்லால் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர் அதிபர் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படமும் வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடித்து வரும் ஜெயிக்கிற குதிரை படத்தின் மீது நம்பிக்கை வைத்து இப்போது நடித்துக்கொண்டிருக்கிறார் ஜீவன்.

இதற்கிடையே மேலும் சில இயக்குனர்களும் அவரிடம் கதை சொல்லி வரும் நிலையில், வரும் இயக்குனர்கள் அவர் நடித்து சூப்பர் ஹிட்டான நான் அவனில்லை பாணி கதைதான் சொல்கிறார்களாம். அதனால் இந்த படத்தில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கும் ஜீவன், பாசிட்டீவை விட நெகடீவ் கலந்த ஹீரோ கதைகளில் நடிக்க தனக்கு அதிக விருப்பம் உள்ளதாகவும் இயக்குனர்களிடம் கூறி வருகிறார்.

 


Post your comment





Related News
படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?
வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை
ஜீவனின் ‘அதிபர்’
‘ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஜீவன்
ரஜினிகாந்தின் ஜானி பட மறு தயாரிப்பில் நடிப்பேன்: நடிகர் ஜீவன் பேட்டி
ஜெயிக்கிற குதிரையில் மீண்டும் ஏறினார் ஜீவன்!
என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள்: நடிகர் ஜீவன் கவலை -
நெகட்டிவ் ஹீரோ கதை தேடும் ஜீவன்!
தூசு தட்டப்படும் ஜீவன் படங்கள்!
காமெடிக்கு மாறிய ஜீவன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions