நெகட்டிவ் ஹீரோ கதை தேடும் ஜீவன்!

Bookmark and Share

நெகட்டிவ் ஹீரோ கதை தேடும் ஜீவன்!

கெளதம்மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்தவர் ஜீவன். அதன்பிறகு ஹீரோவாக பல படங்களில் நடித்தபோதும் நெகட்டிவ் ஹீரோவாக அவர் நடித்த திருட்டுப்பயலே, நான் அவனில்லை படங்கள்தான் அவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தன.

ஆனால், அவர் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் மச்சக்காரன், தோட்டா போன்ற படங்கள் ஓடாததோடு, கடைசியாக நடித்த கிருஷ்ண லீலை படம் வெளிவரமுடியாத சிக்கலில் சிக்கியதால் ஜீவனும் சிக்கிக்கொண்டார்.

அதனால் 5 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு தற்போது மீண்டும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதில் ஜெயிக்கிற குதிரை பைனான்ஸ் பிரச்சினையில் கிடந்தபோதும், சமுத்திரகனியுடன் இணைந்து அவர் நடித்து வரும் அதிபர் படம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தநேரத்தில், தனக்கு ஏற்கனவே நெகட்டிவ் ஹீரோ கதைகளே திருப்புமுனை படங்களாக அமைந்ததால் தன்னிடம் கதை சொல்ல வந்த சில டைரக்டர்களிடம் பாசிட்டிவை விட நெகட்டிவ் கதைகளில் நடிக்க தான் அதிக ஆர்வமாக இருப்பதாகவும் கூறி வருகிறார் ஜீவன்.

அதனால் நெகட்டிவ் கதை வைத்திருக்கும் கோலிவுட் டைரக்டர்கள் ஜீவனை சந்திக்கத் தொடங்கியுள்ளனர்.


Post your comment





Related News
படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?
மீண்டும் நான் அவனில்லை ஜீவன்!
வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை
ஜீவனின் ‘அதிபர்’
‘ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஜீவன்
ரஜினிகாந்தின் ஜானி பட மறு தயாரிப்பில் நடிப்பேன்: நடிகர் ஜீவன் பேட்டி
ஜெயிக்கிற குதிரையில் மீண்டும் ஏறினார் ஜீவன்!
என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள்: நடிகர் ஜீவன் கவலை -
தூசு தட்டப்படும் ஜீவன் படங்கள்!
காமெடிக்கு மாறிய ஜீவன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions