காமெடிக்கு மாறிய ஜீவன்!

Bookmark and Share

காமெடிக்கு மாறிய ஜீவன்!

காக்க காக்க படத்தில் அதிரடி வில்லனாக களமிறங்கிய ஜீவன், பின்னர் திருட்டுப்பயலே, நான் அவனில்லை படங்களின் வெற்றியினால் வேகமாக வளர்ந்தார். ஆனால் அவர் நடித்த கிருஷ்ண லீலை படம் வெளிவர முடியாததால் சிக்கலில் சிக்கியதால் அதன்பிறகு ஜீவனுக்கும் அடுத்தடுத்து படங்கள் இல்லை.

அதனால் சில ஆண்டுகளாக படமே இல்லாமல் இருந்த அவரை ஜெயிக்கிற குதிரை படம் மூலம் மீண்டும் களமிறக்கியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். தனது வழக்கமான நெகட்டிவ் பார்முலா நடிப்பையும் கலந்து அந்த படத்தில் நடித்துள்ள ஜீவன், அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இப்போது, பிரமுகர் என்றொரு புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால் இதற்கு முந்தைய படங்களில் பெரிய அளவில் காமெடி செய்யாத ஜீவன், இந்த படத்தில் பெரிய கலாட்டாவே செய்கிறாராம். அவருடன் தம்பி ராமைய்யாவும் இணைந்திருப்பதால், ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் காமெடி காட்சிகள் அதிகம் உள்ளதாம்.

முக்கியமாக, தனக்கு காமெடி பெரிதாக வராது என்றபோதும் அதை வர வைத்தே ஆக வேண்டும் என்று ஒவ்வொரு காட்சிகளிலும் நடிப்பதற்கு முன்பு தம்பி ராமைய்யாவுடன் இணைந்து ரிகர்சல் பார்த்துக்கொண்டு காமெடி காட்சிகளில் நடிக்கும் ஜீவன், இந்த படம் என்னை ஜனரஞ்சகமான ஹீரோவாக மாற்றும் என்று கூறுகிறார். 


Post your comment





Related News
படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?
மீண்டும் நான் அவனில்லை ஜீவன்!
வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை
ஜீவனின் ‘அதிபர்’
‘ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஜீவன்
ரஜினிகாந்தின் ஜானி பட மறு தயாரிப்பில் நடிப்பேன்: நடிகர் ஜீவன் பேட்டி
ஜெயிக்கிற குதிரையில் மீண்டும் ஏறினார் ஜீவன்!
என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள்: நடிகர் ஜீவன் கவலை -
நெகட்டிவ் ஹீரோ கதை தேடும் ஜீவன்!
தூசு தட்டப்படும் ஜீவன் படங்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions