தூசு தட்டப்படும் ஜீவன் படங்கள்!

Bookmark and Share

தூசு தட்டப்படும் ஜீவன் படங்கள்!

நான் அவனில்லை, திருட்டுப்பயலே படங்கள் கொடுத்த ஹிட் காரணமாக ஜெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருந்தார் ஜீவன். அதனால் கவிதாலயா நிறுவனத்துக்காக அவர் நடித்துக்கொண்டிருந்த கிருஷ்ணலீலை படம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது.

ஆனால், சிலபல காரணங்களால் அந்த படத்தை வெளியிடவே முடியாத நிலை ஏற்பட்டது. விளைவு, ஜீவனின் மார்க்கெட்டும் அந்த படத்தினால் காலியானது. அதனால் அவர் நடித்துக்கொண்டிருந்த பயணிகள் கவனத்திற்கு படமும் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஜெயிக்கிற குதிரை படத்தில் ஜீவன் ரீ-என்ட்ரியாகியிருப்பதால், அவர் நடித்து கிடப்பில் போடப்பட்டிருந்த பயணிகள் கவனத்திற்கு படத்தை தற்போது தூசு தட்டுகிறார்கள்.

இந்த படத்தில் ஜீவனுடன் தோட்டா படத்தில் நடித்திருந்த ப்ரியாமணிதான் ஹீரோயினியாக நடித்தார். ஆக, இப்படத்தை தூசு தட்டும்போது மீண்டும் ப்ரியாமணியை அழைப்பார்களா? இல்லை கதையில் திருத்தம் செய்து அவர் இல்லாமலேயே படமாக்குவார்களா? என்பது பற்றி தெரியவில்லை.

ஆனால், ஜெயிக்கிற குதிரை ரிலீசானதும் இந்த படத்தில் மீண்டும் நடிப்பதாக கூறியிருக்கிறாராம் ஜீவன்.


Post your comment





Related News
படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?
மீண்டும் நான் அவனில்லை ஜீவன்!
வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை
ஜீவனின் ‘அதிபர்’
‘ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஜீவன்
ரஜினிகாந்தின் ஜானி பட மறு தயாரிப்பில் நடிப்பேன்: நடிகர் ஜீவன் பேட்டி
ஜெயிக்கிற குதிரையில் மீண்டும் ஏறினார் ஜீவன்!
என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள்: நடிகர் ஜீவன் கவலை -
நெகட்டிவ் ஹீரோ கதை தேடும் ஜீவன்!
காமெடிக்கு மாறிய ஜீவன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions