ஜெயிக்கிற குதிரையில் மீண்டும் ஏறினார் ஜீவன்!

Bookmark and Share

ஜெயிக்கிற குதிரையில் மீண்டும் ஏறினார் ஜீவன்!

கவிதாலயா தயாரிப்பில் கிருஷ்ண லீலை படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது பரபரப்பாக பேசப்படும் நடிகராக இருந்தார் திருட்டுப்பயலே ஜீவன்.

ஆனால் அந்த படம் சில பல காரணங்களால் இப்போதுவரை திரைக்கு வரவில்லை. அதனால் அதன்பிறகு ஜீவனை யாரும் புதிய படங்களுக்கு புக் பண்ணாததால் பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

இந்த நிலையில், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தான் தனது ஜெயிக்கிற குதிரை படத்துக்காக அவரை மீண்டும் அழைத்து வந்தார். ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே அப்படத்துக்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

அதையடுத்து அதிபர் என்ற படத்தில் இயக்குனர் சமுத்திரகனியுடன் இணைந்து நடித்து வந்தார் ஜீவன். அந்த படம் தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில், பைனான்ஸ் பிரச்னையில் நிறுத்தப்பட்ட ஜெயிக்கிற குதிரை படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

அதனால் ரீ-என்ட்ரியில் நடித்த முதல் படமே கிடப்பில் கிடக்கிறதே என்று மனதளவில் பீல் பண்ணிக்கொண்டிருந்த ஜீவன் மறுபடியும் உற்சாகமாக ஜெயிக்கிற குதிரையில் ஏறியிருக்கிறார்.

 


Post your comment





Related News
படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?
மீண்டும் நான் அவனில்லை ஜீவன்!
வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை
ஜீவனின் ‘அதிபர்’
‘ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஜீவன்
ரஜினிகாந்தின் ஜானி பட மறு தயாரிப்பில் நடிப்பேன்: நடிகர் ஜீவன் பேட்டி
என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள்: நடிகர் ஜீவன் கவலை -
நெகட்டிவ் ஹீரோ கதை தேடும் ஜீவன்!
தூசு தட்டப்படும் ஜீவன் படங்கள்!
காமெடிக்கு மாறிய ஜீவன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions