என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள்: நடிகர் ஜீவன் கவலை -

Bookmark and Share

என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள்: நடிகர் ஜீவன் கவலை -

சற்று இடைவெளிக்குப் பின் ஜீவன் நடிக்கும் படம் அதிபர் .அவருடன் இப்படத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கிறார். எப்போதும் நெகட்டிவ் நிழலுள்ள பாத்திரத்தில் நடிப்பவர் ஜீவன்.

அந்த நிழல் நிஜத்திலும் தன் மீது விழுந்துள்ளதாகக் கூறுகிறார். அதிபர் ஆடியோ விழாவில் ஜீவன் பேசும் போது " நான் கெட்டவன்இல்லை .நடிப்புக்காக நான் அவனில்லை படத்தில் கூட நான் பெண்களை ஏமாற்ற மாட்டேன்.

அவர்கள்தான் என்னிடம் ஏமாறுவார்கள். அதிபர் படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்த போது கனல் கண்ணன் நன்றாகப் பழகினார். நான் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்கள்.ஆனால் உங்களைப்பற்றி கேள்விப்பட்டதே வேறு என்றேன். உடனே அவர் , நானும் உங்களைப்பற்றி கேள்விப்பட்டது வேறு. ஜீவன் திமிர் பிடித்தவர், தலைக்கனம் பிடித்தவர், ஒழுங்காக கதைகேட்க மாட்டார்.

அவரைப் பார்க்கவே முடியாது. யாரையும் மதிக்க மாட்டார் என்று சொல்கிறார்கள் என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. நான் எனக்கென தி.நகரில் ஒரு அலுவலகம் வைத்திருக்கிறேன் 45 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்கிறேன் யார் வேண்டுமானாலும் வரலாம்.

கதை சொல்லலாம்.நான் யாரையும் எளிதாக நினைத்து விட மாட்டேன் .என்னைப்பற்றி அவதூறு பரப்புகிறார்கள் யார் அவர்கள்? நான் நடித்து இன்னொரு படமாகஜெயிக்கிற குதிரை உருவாகிறது இவ்வாறு ஜீவன் கூறினார்.


Post your comment





Related News
படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?
மீண்டும் நான் அவனில்லை ஜீவன்!
வாட்ஸ் அப்பில் உலா வரும் இயக்குனரின் கண்ணிர் கதை
ஜீவனின் ‘அதிபர்’
‘ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஜீவன்
ரஜினிகாந்தின் ஜானி பட மறு தயாரிப்பில் நடிப்பேன்: நடிகர் ஜீவன் பேட்டி
ஜெயிக்கிற குதிரையில் மீண்டும் ஏறினார் ஜீவன்!
நெகட்டிவ் ஹீரோ கதை தேடும் ஜீவன்!
தூசு தட்டப்படும் ஜீவன் படங்கள்!
காமெடிக்கு மாறிய ஜீவன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions