‘ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஜீவன்

Bookmark and Share

‘ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஜீவன்

சூர்யாவின் ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் ஜீவன். அதற்கு பின் அவர் நடித்த 'நான் அவன் இல்லை' படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இப்படத்தின் இரண்டாம் பாகம் சுமாரான வரவேற்பை பெற்றது.

இப்படத்தையடுத்து சில காலமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த ஜீவன், தற்போது 'அதிபர்', 'ஜெயிக்கிற குதிரை' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஜானி’ படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

ஜானி படத்தை பிரபல இயக்குனர் மகேந்திரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். தற்போது இப்படத்தின் ரீமேக் உரிமையை ஜீவன் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

'நான் அவன் இல்லை' படமும் கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்த படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions