ஜெனிலியாவுடன் மீண்டும் படத்தில் நடிக்க ஆசை-ரித்தேஷ் !

Bookmark and Share

ஜெனிலியாவுடன் மீண்டும் படத்தில் நடிக்க ஆசை-ரித்தேஷ் !

பாலிவுட்டில் பிரபலமான ஜோடியாக இருக்கும் ரித்தேஷ் தேஷ்முக்,ஜெனிலியா. இருவரின் திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜெனிலியா படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ரித்தேஷ் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மீண்டும் ஜெனிலியாவுடன் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ரித்தேஷ் மேலும்;- ‛‛நானும், ஜெனிலியாவும் மீண்டும் இணைந்து நடிப்போம் என்று நினைக்கிறேன். ஜெனிலியா எனது பேவரைட் நடிகை. அவருடன் நடிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக நடிப்பேன்.

எனக்கு ஜெனிலியாவுடன் மராத்தி படம் ஒன்றில் நடிக்க ஆசை. அவர் நிறைய மொழி படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் நானும், ஜெனிலியாவும் இணைந்து நடிப்போம், எனது கனவு நிறைவேறும் என்று நினைக்கிறேன் என்றார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions