ஹனிமூன் போக நேரமில்லாமல் ஷூட்டிங்கிற்கு பறக்கும் நடிகை..!

Bookmark and Share

ஹனிமூன் போக நேரமில்லாமல் ஷூட்டிங்கிற்கு பறக்கும் நடிகை..!

உண்மைதான். மலையாளத்தில் பாதமாறி அறிமுக நடிகையாக சமீபத்தில் உள்ளே நுழைந்திருப்பவர் ஜுவல் மேரி. அறிமுகமே மெகாஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக என்பதால் உடனே லைம்லைட்டிற்கு வந்துவிட்டார் ஜுவல் மேரி. கேரள சேனல் ஒன்றில் சின்னத்திரை தொகுப்பாளராக, ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் பங்குபெற்ற நடனக்கலைஞராக வலம் வந்தவர் இந்த தான் ஜுவல் மேரி.. இவர் சின்னத்திரையில் இருந்தபோதே நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த  ஜென்சன் என்பவரை காதலித்து வந்தார். 

தானும் சினிமாவில் நடிப்போம் என எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ, ஆனால் நிச்சயமாக மம்முட்டிக்கு ஜோடியாக நடிப்போம் என்று கனவிலும் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் ஜுவல் மேரி.. தற்போது தன் மீது பாய்ந்திருக்கும் புகழ் வெளிச்சத்தால் தனது காதல் சிதைந்துவிடுமோ என அச்சப்பட்ட அவர் தனது காதலரை கடந்த ஏப்ரல்மாதம்  ரகசிய திருமணம் செய்துகொண்டார். 

திருமணம் செய்துகொண்ட யோகமோ என்னவோ அடுத்து மம்முட்டி நடிக்கும் உடோப்பியாயிலே ராஜாவு படத்திலும் ஹீரோயினாக நடிக்கும் பாக்கியம் ஜுவல் மேரிக்கு கிடைத்துள்ளது. இதனால் திருமணம் முடிந்தாலும் கூட தேனிலவு செல்ல நேரமில்லாமல் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். கேட்டால், “திருமணமாகி வேலைக்கு செல்லும் மற்ற பெண்களைப்போலத்தான் நானும் படப்பிடிப்புக்கு சென்று வருகிறேன்.. எனது கணவர் எனக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்” என்கிறார் ஜுவல் மேரி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions