ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?

Bookmark and Share

ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி ஆகியோர் நடித்து வரும் படம் - அப்பாடக்கர். சந்தானத்தின் காமெடி டயலாக்கை தலைப்பாக வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படமும் அக்மார்க் காமெடிப் படம்தான். இப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் பாக்கி இருந்ததினால் அப்பாடக்கர் படம் முடிவடையாமல் இருந்தது.

ஒருவழியாக அப்பாடக்கர் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த சில நாட்களாக சென்னையிலுள்ள பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.  ஒரு இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கி உள்ளது -  லட்சுமி மூவி மேக்கர்ஸ். இதே நிறுவனம் தயாரித்த ராஸ்கல் படத்தில் ஏற்கனவே நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. அப்படத்தின் தோல்வி காரணமாக படத்தயாரிப்பையே கைவிட்டனர். சில வருட இடைவெளிக்குப் பிறகு அதே ஜெயம்ரவி நடிக்கும் படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பில் கால் பதித்துள்ளது லட்சுமி மூவி மேக்கர்ஸ்நிறுவனம். 

அப்பாடக்கர் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.  தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இயக்குநர் பிசியாகியுள்ளார். ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான ரோமியோ ஜூலியட் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருப்பதால் மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறார் சுராஜ்.

அந்த வெற்றியைப் பயன்படுத்தி விரைவிலேயே அப்பாடக்கர் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக இப்படத்தின் டீசர் மற்றும் இசையை வெளியிடவுள்ளனர். ஜெயம் ரவி நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கி வரும் தனி ஒருவன் மற்றும் பூலோகம் ஆகிய படங்களும் ரிலீஸுக்குத் தயாராக காத்திருக்கிறது. ரோமியோ ஜூலியட் வெற்றியை எந்த படம் அறுவடை செய்யப்போகிறதோ?


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
ரோமியோ ஜூலியட் படம் சாதனை!
இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions