ஜிகர்தண்டா ஹிந்தி ரைட்ஸ் பஞ்சாயத்து!

Bookmark and Share

ஜிகர்தண்டா ஹிந்தி ரைட்ஸ் பஞ்சாயத்து!

பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய இரண்டாவது படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா நடித்த இந்தப் படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்தார்.

ஜிகர்தண்டா படம் தயாரிப்பில் இருந்தபோது, இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜுக்கும், தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள். குறிப்பிட்ட பட்ஜெட்டில், திட்டமிட்ட நாட்களில் படத்தை முடிக்காமல் கார்த்திக் சுப்பாராஜ் படத்தை எடுத்துக் கொண்டே இருந்தார்.

அதனால் பட்ஜெட் அதிகமாகிவிட்டதாக கதிரேசன் கடுப்படித்திருக்கிறார். சரியான திட்டமிடல் இல்லாமல் பல காட்சிகளை எடுத்து, கடைசியில் அந்தக்காட்சிகளை வேண்டாம் என்று தூக்கிப்போட்டிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.

சினிமாவில் அனுபவம் இல்லாத பையனை வைத்து படம் எடுப்பது தவறு என்று கதிரேசன் பல தயாரிப்பாளர்களிடம் வெளிப்படையாகவே புலம்பி வந்தார். எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக ஒரு சம்பவம் ஜிகர்தண்டா படம் தணிக்கைக்கு சென்றபோது நடந்தது.

படத்தில் அளவுக்கதிகமாக வன்முறை இருப்பதால் யு சான்றிதழ் தர முடியாது என சொன்ன தணிக்கை அதிகாரி, அந்தக்காட்சிகளை நீக்கினால் யு தருவதாக சொன்னார். யு சான்றிதழ் கிடைத்தால்தான் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால் அந்தக்காட்சிகளை நீக்கச்சொன்னார் கதிரேசன்.

கார்த்திக் சுப்பாராஜ் மறுத்துவிட்டார். அதன்காரணமாக வரிவிலக்கு என்ற பெயரில் பல கோடி லாபம் கிடைக்காமல்போனது. அதனால் கோபத்தின் உச்சிக்கே சென்றார் கதிரேசன்.

இதன் தொடர்ச்சியாய் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜிகர்தண்டா படத்தின் ஹிந்தி ரீமேக் ரைட்ஸை கார்த்திக் சுப்பாராஜுக்கு தெரியாமலே சில கோடிக்கு விற்றுவிட்டார் கதிரேசன்.

அதில் எனக்கு 40 சதவிகிதம் ராயல்டி தர வேண்டும் என்று தகராறு செய்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். பழைய சம்பவத்தை மறக்காத கதிரேசனோ ராயல்டி தர முடியாது என்கிறாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions