கதைநாயகிக்கு ‘கூடாது’ என கண்டிஷன் போட்ட இயக்குநர்!

Bookmark and Share

கதைநாயகிக்கு ‘கூடாது’ என கண்டிஷன் போட்ட இயக்குநர்!

முகநூல் நட்பைச் சொன்ன படமான ஜிகினா படத்தில் விஜய் வசந்த், சானியா தாரா நடித்திருந்தனர். கதைப்படி கதைநாயகியாக நடித்திருப்பவர் ரா.ஸ்ரீதேவி. படத்தில் கறுப்பான ஒருத்தி என்று தெரியாமல், முகநூல் மூலம்  நாயகன் காதலிப்பதுதான் கதை.

எனவே அந்த சஸ்பென்சைக் காப்பாற்ற படத்தில் அந்த பாத்திரத்தில் நடித்த நடிகையான ரா.ஸ்ரீதேவியை படாதபாடு படுத்தி எடுத்து விட்டாராம் இயக்குநர் ரவிநந்தா பெரியசாமி  படத்தில் நடிப்பது என்று முடிவானபின் அலுவலகம் வரச் சொல்லி யாரிடமும் எதைப்பற்றியும் பேசக் கூடாது, படிக்கக்கூடாது, பாட்டு கேட்கக்கூடாது, பேசக்கூடாது, போன் பேசக் கூடாது, புத்தகம் படிக்கக் கூடாது  என நிறைய கூடாது என கட்டுப்பாடுகள் சொல்லி, அப்படிச் செய்தால் அது நடிக்கும் கேரக்டரையே கெடுத்து விடும் என்றிருக்கிறார். அப்படியே நடிகையும் பலநாள்கள் இருந்தாராம்.

படப்பிடிப்புக்கு போனபோது கூட அங்கு இந்த ஸ்ரீதேவிதான் கதைநாயகி என தெரியாமல் படக்குழுவினர் இவரை அவமதித்தார்களாம்.  க்ளைமாக்ஸில் விஜய் வசந்துடன் கொடைக்கானல் மலை உச்சியில் ஏறி நடித்தபோது.

டூயட் பாடிய கடைசி நாட்களில்தான் இவரதான் முக்கிய பாத்திரம் என்று தெரிந்ததாம். ஏம்மா.. முன்னமே இதுபற்றி சொல்லக் கூடாதா என்றார்களாம் குழுவினர். எந்த நிகழ்ச்சிக்கும் மற்றும் பத்திரிகையாளர் காட்சிக்குக் கூட  ஸ்ரீதேவியை இயக்குநர் அழைக்கவில்லையாம்.  

அந்தளவுக்கு படத்தின் சஸ்பென்சை இரும்புப் பெட்டிக்குள் வைத்து காப்பாற்றி இருக்கிறார் இயக்குநர் ரவிநந்தா பெரியசாமி . ஜிகினா கதைநாயகியின் கதையைவிட இது பெரிய சோகமாக இருக்கிறதே!.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions