'ஜிகினா' என்பது நான் தான்- விஜய் வசந்த்

Bookmark and Share

'ஜிகினா' என்பது நான் தான்- விஜய் வசந்த்

''இன்றைய சமூகத்தில் நிலவும் ஒரு முக்கிய பிரச்சினை ஆன சமூக வளைத்தளங்களில் வரும் போலி அடையாளங்களைப் பற்றியக் கதை தான் 'ஜிகினா'.

இன்றைய வர்த்தக உலகத்தில் நிறம் என்பது தான்  குணத்தையே நிர்ணயம் செய்யும்  என்ற எண்ணத்தில் தான் பலரும் உள்ளனர். கருப்பாக உள்ளவர்கள் சிவப்பாக உள்ளவர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. இதை குறையாக நினைத்து , போலி அடையாளம் மூலம்  மற்றவரை கவர நினைக்கும் ஒரு இளைஞனைப்  பற்றியக் கதை தான் 'ஜிகினா'.

'ஜிகினா' திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் நிறுவனம் மோளம் வெளி இட இருப்பதே எனாகு மிகப் பெருமை. அதற்காக லிங்கு சாமி சாருக்கும், போஸ் சாருக்கும் நன்றிகள் பல.

என்னுடையக் கதா பாத்திரத்தை  இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி  மிக அருமையாக வடிவமைத்து உள்ளார். படம் பார்த்த பின்னர், அரங்கில் இருந்து வெளி வரும் ரசிகர்கள் இடையே என்னுடைய கதாப்பாத்திரம் பெரிய அளவுக்கு பேசப்படும் என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை உண்டு.

வளர்ந்து வரும் என்னைப் போன்ற நடிகர்களுக்கு கிடைக்கும் இத்தகையக் கதா பாத்திரம் மிக பெரிய வரமாகும். நமது வாழ்வில் இன்றி அமையாத அங்கமாகி விட்ட face book தான். ,'ஜிகினா' வின் முக்கிய கதா பாத்திரம்.

'ஜிகினா' இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக இருக்கும் என்பதிலும் , இதுவே வர்த்தக ரீதியாக இந்தப் படம் பெரும் வெற்றிப் பெற உதவும் என்பதில் சந்தேகமே இல்லை ' என்று பளீரிடும்  தன்னம்பிக்கையோடுக் கூறினார்  விஜய் வசந்த். 


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
400 படங்களுக்கும் அதிகமாக நடித்த பிரபல நடிகை மரணம் - சோகத்தில் திரையுலகம்
அப்பாவால் அப்படி ஒரு படம் பண்ண முடியாதுப்பா- வசந்தபாலனின் உருக்கமும், கிண்டலும்
ஹெலிகாப்டர் வரை பெண்கள் கேட்பதற்கு இது தான் காரணம்- வசந்தபாலன் அதிரடி
சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் வசந்த்
மறைக்கப்பட்ட உண்மையான ஹீரோக்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions