கருணாசுக்கு ரெடி பண்ணிய கதையில் நடிக்கும் ஜீவா!

Bookmark and Share

கருணாசுக்கு ரெடி பண்ணிய கதையில் நடிக்கும் ஜீவா!

கருணாஸ் நாயகனாக நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கியவர் ராம்நாத். அப்படத்தில் கருணாசுக்கு ஜோடியாக நவ்னீத் கவுர் நடித்திருந்தார்.

அவர்களுடன் கோட்டா சீனிவாசராவ், மயில்சாமி, கொச்சின் ஹனிபா, ஆர்.சுந்தர்ராஜன் உள்பட பலர் நடித்திருந்தனர். அப்படத்தை தயாரித்த கருணாஸ் அந்த படத்துக்கும் தானே இசையமைத்திருந்தார்.

அப்படம் வெற்றி பெற்றபோதும் அடுத்தபடியாக உடனடியாக படம் இயக்காத ராம்நாத், தற்போது ஜீவா-நயன்தாரா இணைந்துள்ள திருநாள் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது.

சமீபகாலமாக சிட்டி கதைகளாக நடித்து வந்த நயன்தாரா இந்த படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் படத்தின் கதையை முதலில் கருணாசுக்காகத்தான் தயார் செய்திருந்தாராம் ராம்நாத்.

அதை ஒருமுறை அவர் ஜீவாவிடம் சொன்னபோது, இந்த கதையில் நானே நடிக்கிறேன் என்று முன்வந்தாராம். கருணாஸ் என்ற காமெடி நாயகனுக்காக உருவாக்கப்பட்ட கதை என்றபோதும், காமெடி கலந்த கதைகளே அதிகமாக வெற்றி பெற்று வருவதால், அந்த ஸ்கிரிப்ட்டில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே நடித்து வருகிறாராம் ஜீவா.


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions