ஜீவா ரவுடியாக நடிக்கும் படப்பிடிப்பில் நிஜ ரவுடிகள் மோதல்

Bookmark and Share

ஜீவா ரவுடியாக நடிக்கும் படப்பிடிப்பில் நிஜ ரவுடிகள் மோதல்

‘யான்’ படத்திற்குப் பிறகு ஜீவா தற்போது நடித்து வரும் படம் ‘திருநாள்’. இந்தப் படத்தில் ஜீவா ரவுடியாக நடிக்கிறார். ரவுடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக மாற, 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்திக் கொண்டதுடன் உடற்பயிற்சி செய்து ஜீவா, தற்போது வேறொரு தோற்றத்தில் இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. சந்து-பொந்து வழியாக ஜீவா ரவுடிகளை துரத்தும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்குள் நிஜமாகவே அப்பகுதியில் சண்டை நடந்தது. இப்படக்காட்சியோடு நிஜ ரவுடிகளின் சண்டையையும் படக்குழுவினர் தத்ரூபமாக படமாக்கியுள்ளார்கள்.

‘ஈ’ படத்திற்குப் பிறகு இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ‘பாண்டியநாடு’ வில்லன் சரத்லோகித்தவா, கருணாஸ், மீனாட்சி, ஜோமல்லூரி, கோபிநாத் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மகேஷ்முத்துசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஸ்ரீ இசையமைத்து வரும் இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கி வருகிறார்.


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions