மண் மணம் கமழும் கதையில் நடிக்க விரும்புகிறேன்: ஜீவா

Bookmark and Share

மண் மணம் கமழும் கதையில் நடிக்க விரும்புகிறேன்: ஜீவா

ஜீவா நடித்த `சங்கிலி புங்கிலி கதவதொற' படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து நடிக்க விரும்பும் கதை பற்றி ஜீவா அளித்த பேட்டி.தமிழ் சினிமா மாறியிருக்கிறது. ஒரு முழு படத்தையும் ஒரு சந்திற்குள் எடுத்துவிட்டு படத்திற்கு ` ஒரு சந்து' என்று பெயரிட்டு வெற்றிப் பெறும் வகையிலான திறமையான இளம் படைப்பாளிகள் இருக்கிறார்கள்.

இதனால் தமிழ் சினிமாவின் பட்ஜெட் மாறிவிட்டது.தமிழ் சினிமாவிற்கு  கதாசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் தான் முதுகெலும்பு. ஒரு படத்திற்கு தேவையான கதையை எழுதுவது அவர்கள் தான். நாங்கள் நடிகர்கள் கதையை கேட்கிறோம். பிடித்தால் கால்ஷீட் தருகிறோம்.

அவ்வளவு தான் எங்களின் பணி.ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கதையை எழுதக்கூடியவர்கள் அவர்கள். கதாசிரியருக்கும், இயக்குநருக்குமான ஊதிய இடைவெளியை குறைக்க வேண்டும். பாகுபலி போன்ற படங்கள் தமிழிலும் வரவேண்டும். பொன்னியின் செல்வன், மருதநாயகம் போன்ற கதைகள் நம்மிடம் நிறைய உள்ளன.

லாப நஷ்டம் எதுவாக இருந்தாலும் சினிமாவை நேசிப்பவர்கள் அதைவிட்டு போகமாட்டார்கள்.எழுத்தாளர் ஜெயமோகனின் அறிமுகமும், நட்பும் கிடைத்தபிறகு மண் மணம் கமழும் கிராமிய கதைகளங்களில் நடிக்க விரும்புகிறேன்.

`சிவா மனசுல சக்தி' என்ற படத்தின் மூலம் நடிகர் ஆர்யாவை கெஸ்ட் ரோலில் நடிக்கவைத்து இதனை தொடங்கி வைத்தது நான் தான். அதன் பின் நானும் ஆர்யாவும் ஏராளமான படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துவிட்டோம். இது ஆரோக்கியமான விசயமாக இருந்தாலும், தற்போது இதுவும் போரடித்து விட்டது. 

`ராம் 'போன்ற பர்பாமென்ஸ் ஓரியண்டட் திரில்லர் கதை என்றால் நடிக்க தயாராகயிருக்கிறேன். அதே போல் மாறுபட்ட கதையில் மாறுபட்ட வேடத்தில் நடிக்கவும் ஆசை இருக்கிறது''.


Post your comment





Related News
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா
ஜுவாவுக்காக இணைந்த சிம்பு - ஜி.வி.பிரகாஷ்
அட்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஷாலுடன் பஞ்சாயத்தில் இறங்கிய ஜீவா – என்ன நடக்குமோ?
TAMIL ROCKERS உரிமையாளரை தொடர்ந்து கவலை வேண்டாம் படத்தை வெளியிட்டவர் கைது!
வெற்றி தோல்வி பற்றி கவலை இல்லை: ஜீவா
ஜீவாவின் கவலையை போக்கியதா கவலை வேண்டாம்?
ஜீவாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்த ஷாருக்கான்!
“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions