ஜீவாவுக்கு மேலும் ஒரு புதுப்படம்

Bookmark and Share

ஜீவாவுக்கு மேலும் ஒரு புதுப்படம்

‘யான்’ படத்தின் தோல்விக்கு பிறகு ஜீவாவுக்கு தமிழ் சினிமாவில் சற்று இடைவெளி ஏற்பட்டது. இருப்பினும், விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க தற்போது முழு வீச்சாக களமிறங்கி பணியாற்றி வருகிறார் ஜீவா. அந்த வரிசையில் தற்போது பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் ‘திருநாள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘ஈ’ படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்துள்ள படம் இது. இப்படத்தில் ஜீவா ரவுடியாக நடிக்கிறார். நயன்தாரா முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாகவே நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியிருக்கிறார். நகுல் நடிப்பில் வெளிவந்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்தப் படத்தை இயக்க உள்ளார். ராம்பிரகாஷ் ராயப்பா கதையை கூறிய உடனே கதை ஜீவாவுக்குப் பிடித்துப்போனதால் உடனே ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஜீவா தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டமாக்கியுள்ளனர்.


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions