விழுந்தாலும் எழ முயற்சிக்கும் ஜீவா!

Bookmark and Share

விழுந்தாலும் எழ முயற்சிக்கும் ஜீவா!

தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும், இயக்குனரின் மகனாக இருந்தாலும், நடிகரின் மகனாக இருந்தாலும் நல்ல தரமான படங்களில் நடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் ஒதுக்கி விடுவார்கள்.

ஆனாலும், சிலர் மட்டுமே அந்தத் தோல்விகளில் இருந்து மீண்டும், மீண்டும் எழ முயற்சிப்பார்கள். அப்படி ஒரு நடிகராக இருந்து வருபவர் ஜீவா. கோ  படத்தின் வெற்றிக்குப் பிறகு  ரௌத்திரம், வந்தான் வென்றான், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், டேவிட், என்றென்றும் புன்னகை, யான்” எனப் பல தோல்விப் படங்களில் நடித்துவிட்டார்.

இடையில் விஜய் நண்பனாக நண்பன் படத்தில் மட்டும் ஓரளவிற்கு நடிப்பில் நல்ல பெயரை வாங்கினார். மற்ற படங்கள் அனைத்துமே அவருக்கு தோல்வியைத் தந்தும், அவருடைய பெயரைக் குலைத்தும்தான் வந்தன.

இருந்தாலும் இப்போதும் எந்தக் கவலையையும் மனதில் ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையில் கவலை வேண்டாம், திருநாள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திருநாள் படத்தில் நேற்றைய, இன்றைய நம்பிக்கை நாயகி நயன்தாராவும், கவலை வேண்டாம்  படத்தில் நாளைய நம்பிக்கை நாயகி கீர்த்தி சுரேஷும் ஜீவா ஜோடியாக நடிக்கிறார்கள்.

திருநாள் படத்தில் கிராமத்து இளைஞனனாகவும், கவலை வேண்டாம் படத்தில் நகரத்து இளைஞன்னாகவும் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே தனக்குத் திருப்பு முனையாக அமையும் என்ற பெரிய நம்பிக்கையில் இருக்கிறாராம் ஜீவா.


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions