இயக்குநர் ராஜேஷை துரத்தும் ஜீவா

Bookmark and Share

இயக்குநர் ராஜேஷை துரத்தும் ஜீவா

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே என வரிசையாக வெற்றியை அறுவடை செய்த இயக்குநர் ராஜேஷ் எம்., கார்த்தியை வைத்து இயக்கிய அழகுராஜா படத்தில் தோல்வியை சந்தித்தார்.

அதனால் அவரது கேரியரே கேள்விக்குறியானது. அழகுராஜா படத்தை அடுத்து தன்னுடைய தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் ஜீவா. அழகுராஜா பிளாப் என்றதும் மெல்ல கழன்று கொண்டார் ஜீவா.

அதன் பிறகே தன்னுடைய சொந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை ராஜேஷுக்குக் கொடுத்தார் ஆர்யா.  தற்போது ஆர்யாவின் பேனரில் வாசுவும் சரவணணும் ஒண்ணா படிச்சவங்க படத்தை இயக்கி வரும் ராஜேஷ் எம். அடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் ஏற்கனவே ட்ராப் பண்ணிய புராஜக்ட்டை தூசுதட்டி எடுத்த ஜீவா, அடுத்தப் படத்தை தனக்கே பண்ண வேண்டும் என்று இயக்குநர் ராஜேஷை வற்புறுத்தி வருகிறாராம்.  

வாசுவும் சரவணணும் ஒண்ணா படிச்சவங்க படம் காமெடி சம்பஜெக்ட் என்பதால் கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கையில்தான் ராஜேஷின் அடுத்தப் படத்தை நாம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறாராம் ஜீவா. ஒருவேளை ரிசல்ட் நெகட்டிவ்வாக இருந்தால்?


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions