நடிகர் ஜீவா தொடங்கி வைத்த ஹெரிடேஜ் கார்களின் அணிவகுப்பு

Bookmark and Share

நடிகர் ஜீவா தொடங்கி வைத்த ஹெரிடேஜ் கார்களின் அணிவகுப்பு

மெட்ராஸ் மோட்டார் ஹெரிடேஜ் கிளப் ஆண்டுதோறும் ‘சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ ராலி’ என்ற பெயரில் பழைய கார்களின் அணிவகுப்பு ஒன்றை பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்து வருகிறது. இந்த வருடமும் இந்த ‘சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ ராலி’ இன்று எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் தொடங்கியது.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த அணிவகுப்பை நடிகர் ஜீவா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரியமான கலையம்சம் நிறைந்த கார்கள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பங்குபெற்றன.

சரியாக 9 மணிக்கு ராலி தொடங்கப்பட்டு, கார்கள் சென்னையின் முக்கிய வீதிகளில் வலம்வந்தன. பின்னர், இந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மைதானத்துக்கு திரும்பி வந்து அணிவகுத்து நின்றன. இன்று மதியம் 12.30 மணிவரை பொதுமக்களின் பார்வைக்காக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட உள்ளன. 

எல்லா வாகனங்களையும் சிறந்த வல்லுனர்கள் பார்வையிட்டு, சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்க இருக்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கு டாபே, எம்.ஆர்.எப், சுந்தரம் மோட்டார்ஸ், தேவேந்திரா முதலிய ஆட்டோ தொழில் நிறுவனங்கள் விளம்பரதாரர்களாக செயல்படுகின்றனர்.


Post your comment





Related News
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி! பின்னணியில் யார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions