ஜீவாவின் இடத்தை பிடித்த பாபி சிம்ஹா!

Bookmark and Share

ஜீவாவின் இடத்தை பிடித்த பாபி சிம்ஹா!

வில்லனாக நடித்து ஹீரோவாக வளர்ந்த நடிகர்கள் பட்டியலில் இப்போது பாபி சிம்ஹாவும் இணைந்துள்ளார். அதுவும் ஒரே நேரத்தில் இறைவி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது உறுமீன், பாம்புசட்டை என நான்கு படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

நேரம், ஆ, ஆடாம ஜெயிச்சோமடா என பல படங்களில் அவர் நடித்தபோதும் ஜிகர்தண்டா என்ற ஒரே படம்தான் அவருக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. ஆக, ஒரே நேரத்தில் கால்சீட்டை பிரித்துக் கொடுத்து நடித்து வரும் பாபி சிம்ஹா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடித்து முடித்து விட்டார்.

இந்த படத்தில் 80 சதவிகிதம் அவர்தான் வருகிறாராம். அந்த அளவுக்கு அவருக்கே முழுக்க முழுக்க முக்கியத்துவம் கொடுத்து அந்த படத்தை தயாரித்துள்ளனர். மேலும், பாம்பு சட்டை படத்தில் பாபி சிம்ஹா கமிட்டாவதற்கு முன்பு ஜீவாதான் நடிப்பதாக இருந்தது.

ஆனால் அவரது யான் படம் கொடுத்த அதிர்ச்சி அவர் நடித்தால் வியாபாரம் சிக்கலாகி விடும் என்று பாபி பக்கம் திரும்பி விட்டார்களாம். ஆக, ஜீவாவின் இடத்துக்கு வந்து விட்டார் பாபி சிம்ஹா.

இதேபோல் வேறு சில மார்க்கெட் இல்லாத ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படங்களும் தற்போது பாபி சிம்ஹா பக்கம் திரும்பி நிற்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.


Post your comment





Related News
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions