ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் பாபி சிம்ஹா

Bookmark and Share

ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் பாபி சிம்ஹா

கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து பயமுறுத்திய படம் ‘யாமிருக்க பயமே’. இதில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

காமெடி திரில்லராக வெளிவந்த இப்படத்தை தொடர்ந்து டி.கே அடுத்தப் படத்தை இயக்க தயாராகிவிட்டார். இவர் இயக்கும் அந்த புதிய படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பாக எல்ரெட் குமாரே தயாரிக்கிறார்.

இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவுள்ளது. இப்படத்தின் கதையை ஜீவாவிடமும், பாபி சிம்ஹாவிடம் டி.கே கூறியிருக்கிறார். இருவரும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆதலால் இருவரையும் வைத்து டி.கே. இயக்குவார் என்று தெரிகிறது. மேலும் இதில் நடிக்கும் நடிகைகளும் இன்னும் தேர்வாகவில்லை.

‘யாருமிருக்க பயமே’ படம் போல் இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions