ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!

Bookmark and Share

ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது!

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது.  

இப்படத்தின் முதல் நாள் படபிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படபிடிப்பு தொடரவிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

கோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘கொரில்லா ’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
விஷாலை பாராட்டிய சிம்பு - வியப்பில் திரையுலகம்.!
நவம்பர் முதல் மீண்டும் திரையுலகினர் ஸ்ட்ரைக், படப்பிடிப்புகள் ரத்து - பரபரப்பு தகவல்.!
கிராமத்து பின்னணியில் முறுக்கு மீசையுடன் தொடங்கியது விஜய் 61 படப்பிடிப்பு
வர்தா புயலால் பைரவாவுக்கு வந்த பிரச்சனை!
பாகுபலியுடன் தொடர்பாகும் பைரவா – எப்படி தெரியுமா?
பைரவா ஷூட்டிங் ஓவர் – சொன்னப்படியே செய்து காட்டிய விஜய்!
பைரவா இறுதிகட்ட படப்பிடிப்பு எங்கு நடக்கிறது?
கவர்ச்சி போட்டோ ஷூட் லட்சுமிமேனன் புது முடிவு
கே.பாலசந்தர் மறைவு: நாளை படப்பிடிப்பு மற்றும் சினிமா பணிகள் ரத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions