இன்று புதிய படத்தின் தலைப்புடன் படப்பிடிப்பை தொடங்கிய ஜீவா

Bookmark and Share

இன்று புதிய படத்தின் தலைப்புடன் படப்பிடிப்பை தொடங்கிய ஜீவா

ஜீவா, நயன்தாராவுடன் நடித்துள்ள ‘திருநாள்’ படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதையடுத்து ஜீவா, ஹன்சிகாவுடன் இணைந்து ‘போக்கிரி ராஜா’ படத்திலும் நடித்துள்ளார். இப்படமும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 

இதையடுத்து, ‘யாமிருக்க பயமே’ படத்தின் இயக்குனர் டிகே இயக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இப்படத்தில் முதலில் ஜீவா ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாயிருந்தார். ஜீவாவும், கீர்த்தி சுரேஷும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ ஷுட் எடுக்கப்பட்டு புகைப்படங்கள் எல்லாம் வெளியானது. 

இதையடுத்து, திடீரென்று இப்படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டு, காஜல் அகர்வாலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுடன் சுனைனா, சுருதி ராமகிருஷ்ணன், மந்த்ரா உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு லோகோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். அதோடு, படப்பிடிப்பையும் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

ஜீவா நடிப்பில் ஏற்கெனவே இரண்டு படங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், மூன்றாவதாக தொடங்கியுள்ள ‘கவலை வேண்டாம்’ படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
TAMIL ROCKERS உரிமையாளரை தொடர்ந்து கவலை வேண்டாம் படத்தை வெளியிட்டவர் கைது!
ஜீவாவின் கவலையை போக்கியதா கவலை வேண்டாம்?
“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’
கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்: நடிகை சுனைனா
இறுதி கட்ட படபிடிப்பில் ‘கவலை வேண்டாம்’!
கவலைபட வைத்தவர் ‘கவலைவேண்டாம்’ படத்திலிருந்து நீக்கம்..
ஜீவாவுக்கு இப்போது கவலை வேண்டாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions