ஜீவாவுக்கு இப்போது கவலை வேண்டாம்

Bookmark and Share

ஜீவாவுக்கு இப்போது கவலை வேண்டாம்

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கோ’, முப்பொழுதும் உன் கற்பனைகள்’, யாமிருக்க பயமே உள்ளிட்ட வித்தியாசமான படங்களின் மூலம் திரையுலகில் தனி இடத்தை பிடித்துள்ள ஆர்.எஸ்.இன்போடெயின்ட்மென்ட் நிறுவனம் தற்போது ஜீவா நடிப்பில் உருவாகும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனம் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’, ‘யான்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.

தற்போது ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு ‘கவலை வேண்டாம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் பாபி சிம்ஹா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

ஜீவா நடிப்பில் கடைசியாக வெளிந்த ‘யான்’ படத்தையும் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம்தான் தயாரித்திருந்தது. நீண்டகால தயாரிப்பில் இருந்த அப்படம் வெளிவந்து சரிவர வெற்றியடையவில்லை.

ஆகையால், மீண்டும் ஜீவாவுடன் இந்நிறுவனம் கைகோர்த்து ஒரு வெற்றிப்படத்தை தர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 


Post your comment





Related News
TAMIL ROCKERS உரிமையாளரை தொடர்ந்து கவலை வேண்டாம் படத்தை வெளியிட்டவர் கைது!
ஜீவாவின் கவலையை போக்கியதா கவலை வேண்டாம்?
“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’
கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்: நடிகை சுனைனா
இறுதி கட்ட படபிடிப்பில் ‘கவலை வேண்டாம்’!
இன்று புதிய படத்தின் தலைப்புடன் படப்பிடிப்பை தொடங்கிய ஜீவா
கவலைபட வைத்தவர் ‘கவலைவேண்டாம்’ படத்திலிருந்து நீக்கம்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions