ஜீவா – நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் “திருநாள்”

Bookmark and Share

ஜீவா – நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் “திருநாள்”

“ராம், டிஷ்யூம், ஈ, தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், என்றென்றும் புன்னகை” போன்ற மாபெரும் வெற்றிப்படங்களிலும், ஷங்கர், அமீர், ராஜேஷ், எஸ்.பி.ஜனநாதன் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் சிறப்பாக நடித்துள்ள ‘மாஸ்’ ஹீரோ ஜீவா, ‘ஈ’ படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் “திருநாள்”.

கடந்த சில மாதங்களாக பல கதைகளை கேட்டும் திருப்தியடையாத ஜீவாவை, இப்படத்தின் கதை வெகுவாக கவர்ந்ததால், உடனடியாக இப்படத்தின் படப்பிடிப்பை துவங்குமாறு இயக்குனரிடம் கூறியுள்ளார். மேலும், ‘தெனாவட்டு’ படத்திற்கு பிறகு, இப்படத்திலேயே கிராமத்து இளைஞனாக ஜீவா நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இப்படத்தின் கதையை கேட்ட உடனேயே நடிக்க சம்மதம் தெரிவித்து, தனது பிசியான கால்ஷீட்டில் தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து  படத்திற்காக வழங்கியுள்ளார்.

நகைச்சுவையும், காதலும், ஆக்ஷனும் சரிவிகிதத்தில் கலந்த இப்படத்தை PS.ராம்நாத் இயக்க உள்ளார். “திருநாள்” படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. இதற்கென கும்பகோணத்தில் பிரம்மாண்டமான வகையில் செட் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தை, திரு.எம்.செந்தில்குமார் அவர்கள் தொடங்கியுள்ள “கோதண்டபாணி பிலிம்ஸ்” எனும் புதிய நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இசை – ஸ்ரீ; ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி; எடிட்டிங் – வி.டி.விஜயன்; கலை இயக்குனர் – சீனு; சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன்; நடனம் – பாபி, பாலகுமார் ரேவதி, தினா[email protected]@@@@@@@@@@@@அஜீத் பிறந்தநாள்: ரசிகர்கள் ரத்த தானம்

நடிகர் அஜீத்துக்கு இன்று பிறந்தநாள். ரசிகர்கள் அவரது பிறந்தநாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினார்கள். மரக்கன்றுகள் நடும்படி ஏற்கனவே ரசிகர்களுக்கு அஜீத் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளும் இன்று நடப்பட்டன.

சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள பாரதமாதா அறக்கட்டளை இல்லத்தில் ஆதரவற்றோருக்கு ரசிகர்கள் உணவு வழங்கினார்கள். நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன. மரக்கன்றும் நடப்பட்டது. வியாசர்பாடி சுந்தரம் தெருவில் ரசிகர்கள் 150 பேர் ரத்த தானம் செய்தார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அஜீத் இபேன்ஸ் அசோசியேஷன் சார்பில் அஜீத் ஏ.சரவணன், இ.சச்சின் மணி ஆகியோர் செய்து இருந்தனர்.

நிகழ்ச்சியில் என்.வேலு, டி.கிருஷ்ணா, பி.ஆனந்த், எஸ்.கமல், கொளத்தூர் என்.மோகன், வி.பத்மநாபன், வ.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். வடகரை பகுதியில் கிங் மேக்கர்ஸ் அஜீத் பேன்ஸ் கிளப் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அஜீத் ஏ.சரவணன், இ.சச்சின் மணி ஆகியோர் பங்கேற்று உணவு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் ஆரம்பம் பி.பாலாஜி, மாதவரம் ஜே.ஜோ, ஆர்ப்பில்லா, எஸ்.பி.பார்த்திபன், ஜெ.முகேஷ், ஆர்.மோகன், பி.ராஜா, ஜெ.கணேஷ், பி.பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Post your comment

Related News
மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!
ரசிகர்களை மகிழ்விக்க வரும் திருநாள்!
திருநாள் படத்தின் சென்சார் ரிசல்ட்
ஜீவாவின் திருநாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பெண்ணாக நடிக்கும் நயன்தாரா
ஜீவா-நயன்தாரா இணையும் படத்தலைப்பு திருநாள்?
ஜீவாவுடன் நயன்தாரா நடிப்பது உறுதியானது!
ஜீவாவுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions