ஜீவாவுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா?

Bookmark and Share

ஜீவாவுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா?

யான் படத்திற்குப் பிறகு ஜீவா ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே இயக்குகிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தையடுத்து ராம்நாத் இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்க இருக்கிறார். ராம்நாத் ஏற்கனவே கருணாசை வைத்து ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ என்னும் படத்தை இயக்கியவர். இப்படம் காமெடி படமாக உருவாகியிருந்தது.

இந்த புதுப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்குமுன் ஜீவாவுடன் நயன்தாரா ‘ஈ’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ஜனநாதன் இயக்கியிருந்தார். அப்படத்திற்குப் பிறகு ஆர்யா-நயன்தாரா ஜோடியாக நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஜீவா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

தற்போது அப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள். இப்படம் காமெடி கலந்த ரொமன்டிக் படமாக உருவாக உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளனர்.


Post your comment





Related News
மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!
ரசிகர்களை மகிழ்விக்க வரும் திருநாள்!
திருநாள் படத்தின் சென்சார் ரிசல்ட்
ஜீவாவின் திருநாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பெண்ணாக நடிக்கும் நயன்தாரா
ஜீவா – நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் “திருநாள்”
ஜீவா-நயன்தாரா இணையும் படத்தலைப்பு திருநாள்?
ஜீவாவுடன் நயன்தாரா நடிப்பது உறுதியானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions