ஜீவாவுடன் நயன்தாரா நடிப்பது உறுதியானது!

Bookmark and Share

ஜீவாவுடன் நயன்தாரா நடிப்பது உறுதியானது!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா-நயன்தாரா நடித்த படம் ஈ. அந்த படம் வெற்றி பெற்றது. ஆனபோதும் அதையடுத்த ஜீவா-நயன்தாரா இருவரும் ஜோடி சேரவில்லை. இந்த நிலையில், யான் படத்திற்கு பிறகு ஜீவா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க நயன்தாராவை அழைத்தபோது அவர் ஜீவாவுடன் நடிக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியானது.

அதனால் அவருக்கு பதிலாக ஸ்ரீதிவ்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொன்னார்கள். ஆனால் இப்போது ஜீவாவின் புதிய படத்தில் நயன்தாராவே நடிப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

அந்த படத்தை ஜீவாவின் தந்தையான ஆர்.பி,.செளத்ரியே தயாரிக்கிறாராம். மேலும், தற்போது ஜீவாவை வைத்து படம் தயாரிக்க எந்த பட நிறுவனமும் முன்வரவில்லை என்ற செய்தியும் பரவலாக வந்துகொண்டிருக்கிறது.

ஆனால், இதுகுறித்து ஜீவா தரப்பை கேட்டபோது, இப்போதும் அவரை வைத்து படம் தயாரிக்க 4 கம்பெனிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால், தொடர் தோல்விகளை தவிர்க்க வித்தியாசமான கதைகளை தேடும் ஜீவா, அந்த படங்களில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.

ஆனால் அவர் தந்தை கேட்டு வைத்திருந்த கதை வித்தியாசமாக இருப்பதால் அந்த படத்தில் நடிக்க ஓகே செய்திருக்கிறார் என்கிறார்கள்.


Post your comment





Related News
மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!
ரசிகர்களை மகிழ்விக்க வரும் திருநாள்!
திருநாள் படத்தின் சென்சார் ரிசல்ட்
ஜீவாவின் திருநாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பெண்ணாக நடிக்கும் நயன்தாரா
ஜீவா – நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் “திருநாள்”
ஜீவா-நயன்தாரா இணையும் படத்தலைப்பு திருநாள்?
ஜீவாவுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions