ஜீவா-நயன்தாரா இணையும் படத்தலைப்பு திருநாள்?

Bookmark and Share

ஜீவா-நயன்தாரா இணையும் படத்தலைப்பு திருநாள்?

யான் படத்திற்குப் பிறகு ஜீவா ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே இயக்குகிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இது நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தையடுத்து ராம்நாத் இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்க இருக்கிறார். ராம்நாத் ஏற்கனவே கருணாசை வைத்து ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ என்னும் படத்தை இயக்கியவர். இப்படம் காமெடி படமாக உருவாகியிருந்தது.

புதுப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இப்படத்திற்கு ‘திருநாள்’ என்று பெயர் வைத்திருப்பதாக் செய்தி வெளியாகியுள்ளது.

காமெடி கலந்த ரொமான்டிக் படமாக உருவாக உள்ளது. படத்தின் தலைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளனர்.
ஜீவாவுடன் நயன்தாரா ஏற்கனவே ‘ஈ’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள். 

 


Post your comment





Related News
மிரள வைக்கும் திருநாள் வசூல் விவரம்!
ரசிகர்களை மகிழ்விக்க வரும் திருநாள்!
திருநாள் படத்தின் சென்சார் ரிசல்ட்
ஜீவாவின் திருநாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பெண்ணாக நடிக்கும் நயன்தாரா
ஜீவா – நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் “திருநாள்”
ஜீவாவுடன் நயன்தாரா நடிப்பது உறுதியானது!
ஜீவாவுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions