ஜீவா படத்துக்கு போக்கிரி ராஜா பெயர் சூட்ட ரஜினி அனுமதி

Bookmark and Share

ஜீவா படத்துக்கு போக்கிரி ராஜா பெயர் சூட்ட ரஜினி அனுமதி

ரஜினிகாந்தின் பழைய படபெயர்களை தங்கள் படங்களுக்கு வைக்க கதாநாயகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினியின் ‘பில்லா’ படபெயர் அஜீத் படத்துக்கு சூட்டப்பட்டது துபோல், ரஜினியின் ‘மாப்பிள்ளை’ படத்தலைப்பில் தனுஷ் ‘நான் மகான் அல்ல’ படத்தலைப்பில் கார்த்தி ‘முரட்டுக்காளை’ படத்தலைப்பில் சுந்தர். சி என வரிசையாக பயன்படுத்தப்பட்டது. 

ரஜினியின் ‘பாயும்புலி’ படத்தலைப்பில் விஷால் நடித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில், ஜீவாவும் தனது படத்துக்கு ரஜினியின் ‘போக்கிரிராஜா’ தலைப்பை இப்பொழுது வாங்கியுள்ளார்.

1982-ல் வெளியான ‘போக்கிரிராஜா’ படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்தனர். இப்படத்தை ஏவி. எம். நிறுவனம் தயாரித்தது. “போக்கிரிக்கு போக்கிரி ராஜா, விடியவிடிய சொல்லித்தருவேன், வாடா என் மச்சீகளா...” போன்ற இனிமையான பாடல்களும் ஹிட் அடித்தது.

இந்த தலைப்புக்காக ஜீவா உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்தையும், ஏவி.எம். நிறுவனத்தையும் அணுகினர்.

அவர்களும் ‘போக்கிரி ராஜா’ தலைப்பை பயன்படுத்த பெருந்தன்மையோடு அனுமதி அளித்தனர் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ராம்பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் ஜீவா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions