காதலர்களுக்குள் கலவரம் ஏற்படுத்திய அத்துவிட்டா பாடல்!

Bookmark and Share

காதலர்களுக்குள் கலவரம் ஏற்படுத்திய அத்துவிட்டா பாடல்!

நடிகர் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “போக்கிரி ராஜா” படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் பிரம்மாண்டாமாக நேற்று நடைபெற்றது.

இதில் சினிமா பிரபலங்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், பாபி சிம்ஹா, நந்திதா, விமல், சத்யராஜ், ரோபோ சங்கர், முனிஷ்காந்த் என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இமான் லைவ் கன்சர்ட் நடைபெற்றது. ஏற்கனவே பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த பாடலை இமான் மேடையில் பாடும்போது விழாவிற்கு வந்திருந்த நட்சத்திரங்களை மேடைக்கு அழைத்து ஆட வைத்தார்.

“அத்துவுட்டா” பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகியுள்ளதால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் பலர் இந்த பாடலுக்கு எழுந்து நின்று ஆடி, பாடி மகிழ்ந்தார்கள். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீஸ் வந்து அவர்களை அமைதியாக்குவதற்குள் சிறிய சலசலப்பு நடந்துவிட்டது.

காதலர் தினமான நேற்று விழாவை சிறப்பிக்கும் வகையில் விழாவிற்கு வந்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் இருவரும் மாலை மாற்றி காதலர் தினத்தை மேடையிலேயே கொண்டாடினர்.

இமான் இசை நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து இதுமாதிரியான இசை நிகழ்ச்சியை அவர் நடத்த வேண்டும் என்று கேட்கத் தொடங்கிவிட்டனர் கோயம்புத்தூர் வாசிகள்.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions