ஜீவாவுடன் ஜோடியாகும் தமன்னா

Bookmark and Share

ஜீவாவுடன் ஜோடியாகும் தமன்னா

ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு எந்த படமும் வெளியாக வில்லை. இந்த வருடம் இவர் நடித்துள்ள ‘போக்கிரி ராஜா’, ‘திருநாள்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. மேலும் ‘கவலை வேண்டாம்’ படத்திலும், ‘ஜெமினி கணேசன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஜீவா நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்படத்தின் மூலம் ஜீவாவுடன் தமன்னா முதன்முதலாக ஜோடி சேர இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. செல்வராகவனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய காளீஸ்வரன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions