ஜீவாவைத்தேடி கும்பகோணம் சென்ற இளவட்ட டைரக்டர்கள்!

Bookmark and Share

ஜீவாவைத்தேடி கும்பகோணம் சென்ற இளவட்ட டைரக்டர்கள்!

தற்போது கவலை வேண்டாம், திருநாள் ஆகிய இரண்டு படங்களில் நடிக்கிறார் ஜீவா. இதில் ஈ படத்தை அடுத்து திருநாள் படத்துக்காக மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார் ஜீவா.

இந்த படத்தை கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய ராம்நாத் இயக்குகிறார். காமெடி, ரொமான்டிக் கதையில் உருவாகி வரும் திருநாள் படப்பிடிப்பு தற்போது கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜீவாவிடம் கதை சொல்ல சென்னையில் முட்டி மோதிக்கொண்டு திரிந்த சில இளவட்ட டைரக்டர்கள் கும்பகோணம் சென்றால் அவரை எளிதில் சந்தித்து விடலாம் என்று அங்கு படையெடுத்தார்களாம்.

அப்படி சென்றவர்கள், தங்களை ஜீவா கண்டு கொள்வாரோ மாட்டாரோ என்ற பயத்துடனேயே சென்றார்களாம். ஆனால் அவரோ, தன்னைத்தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்றதும், அவர்களை வரவேற்றவர், தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் கதையும் கேட்டாராம்.

அந்த கதைகளில் நடிப்பது பற்றி ஜீவா எந்த முடிவையும் சொல்லாதபோதும், அவரிடமிருந்து நல்ல பதில் வரும் என்ற நம்பிக்கையுடன் அந்த இளவட்ட டைரக்டர்கள் சென்னை திரும்பியிருக்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions