தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்கும் ஜீவா

Bookmark and Share

தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்கும் ஜீவா

தமிழ் திரையில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த ஜீவாவிற்கு, யான் போன்ற படம் பெரிய தோல்வி படமாக அமைந்ததால் அவரது மார்கெட் தற்சமயம் குறைய தொடங்கியுள்ளது. தற்போது கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்து வரும் ஜீவா, மீண்டும் தனது இடத்தை பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றார்.

இதனை அறிந்த அவரது தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.பி. சௌத்ரி தெலுங்கு திரையில் வெற்றிபெற்ற பட்டாஸ் படத்தை தனது மகனுக்காக ரீமேக் செய்ய முன்வந்துள்ளார்.

பட்டாஸ்  படத்தின் தமிழ் உரிமையை சௌத்ரி, அப்படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான கல்யாண் ராமிடமிருந்து பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளாராம். இப்படத்தின் இயக்குநர், நடிகை உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions