ஜில் ஜங் ஜக் படத்தின் பிரபல பிங்க் கார் விற்பனைக்கு வருகிறது!

Bookmark and Share

ஜில் ஜங் ஜக் படத்தின் பிரபல பிங்க் கார் விற்பனைக்கு வருகிறது!

சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் பிங்க் நிறத்திலான ஒரு கார் முக்கிய பங்கு வகித்தது. இந்த காரை வைத்துதான் படத்தின் கதையே நகரும். அம்பாசிடர் வகையிலான இந்த கார் பெட்ரோலில் இயங்கக்கூடியது. 

இந்த காரை இப்போது விற்பனை செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 1980 ஆம் ஆண்டு மாடலான இந்த காரின் விலை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கதாநாயகியே இல்லாமல் வெளிவந்த இந்த படத்தில் இந்த காரும் கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. காரின் விலை மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இந்த காரை வாங்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர். 

‘ஜில் ஜங் ஜக்’ படத்தை தீரஜ் வைத்தி என்பவர் இயக்கியிருந்தார். சித்தார்த்துடன் அவினாஷ், சன்ந்த், ராதாரவி ஆகியோரும் நடித்திருந்தனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்த இந்த படத்தை சித்தார்த் தனது சொந்த பேனரில் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions