
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் நடிகர் விஜய் நடித்த ஜில்லா படம் தமிழ் மற்றும் மலையாள திரையில் சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் தெலுங்கு திரையில் தற்போது மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் தெலுங்கு உரிமையைப் பெற்றிருக்கும் ஸ்ரீ ஒபுலேஸ்வர புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் இதனை தெரிவித்துள்ளார். முதலில் ஜில்லா படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் என்றே கூறப்பட்டது.
பாலகிருஷ்ணாவிற்கு இப்படம் மிகவும் பிடித்திருப்பதாகவும் இப்படத்தில் அவருடன் விஜய் வேடத்தில் நடிகர் கல்யாண் ராம் நடிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இப்படத்தில் நடிக்க முடியாது என கடைசி நேரத்தில் பாலகிருஷ்ணா மறுத்து விட்டார்.
அதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் பாலகிருஷ்ணா தனது 98வது படமாக நடித்துள்ள லயன் மே 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனிடையே தனது 100வது படத்தை நடிக்கும் வரை தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க பாலகிருஷ்ணா விரும்பவில்லையாம். இதனாலயே ஜில்லா ரீமேக்கில் அவர் நடிக்க மறுத்து விட்டாராம்.
Post your comment