தெலுங்கு ஜில்லா ரீமேக் கைவிடப்பட்டதா?

Bookmark and Share

தெலுங்கு ஜில்லா ரீமேக் கைவிடப்பட்டதா?

நடிகர் விஜய் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

நடிகர் விஜய் போலீஸாக, இப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலும் அவருக்கு ஜோடியாக போலீஸாக நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக கூறப்பட்டது.

மோகன்லால் கதாபாத்திரத்தில் வெங்கடேஷும், விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா அல்லது ராணா நடிக்கலாம் என்று கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பாலகிருஷ்ணாவிற்கு இப்படம் மிகவும் பிடித்திருப்பத்கவும் இப்படத்தில் அவருடன் விஜய் வேடத்தில் நடிகர் கல்யான் ராம் நடிக்கலாம் என்றும் பல்வேறு செய்திகள் கூறப்பட்டன.

ஆனால் தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படப்போவதில்லை என இப்படத்தின் தெலுங்கு உரிமையைப் பெற்றிருக்கும் ஸ்ரீ ஒபுலேஸ்வர புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளார்.

இப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்படும் எனவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருக்கும் ஜில்லா படத்தின் தெலுங்கு தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions