ஜித்தன்-2 படத்தில் விஷால்!

Bookmark and Share

ஜித்தன்-2 படத்தில் விஷால்!

பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீடு படத்துக்குப்பிறகு ஒஸ்தி, ஒரு நடிகையின் வாக்குமூலம், ஜில்லா ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் ஜித்தன் ரமேஷ். இந்த நிலையில் தற்போது அவரது முதல் படமான ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஜித்தன் முதல் பாகத்தை இயக்கிய வின்சென்ட் செல்வா இந்த படத்திற்கு கதை வசனம் எழுத, ராகுல் படத்தை இயக்குகிறார். மேலும், முதல் பாகத்தில் கதாநாயகியாக பூஜா நடித்தார். ஆனால் இந்த படத்தில் மேகா பட நாயகி சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

அதேபோல், ஜித்தன் படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த முறை அவர் இல்லை. மாறாக, சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் ஒரு கெஸ்ட் ரோலில் விஷால் நடிக்கிறாராம்.

தற்போது ஜித்தன்-2 படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், விஷால் பாயும்புலி படத்தில் நடித்து விட்டு வந்ததும் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்குகிறார்களாம்.


Post your comment





Related News
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
சண்டக்கோழி 2: பிப்ரவரியில் அடுத்த ரவுண்டு மல்லுக்கட்ட தயாராகும் விஷால்
சண்டக்கோழி 2 என்ன ஆனது?
ஏப்ரல் 8-ல் மீண்டும் பிறக்கும் ‘ஜித்தன் ரமேஷ்’
பிப்ரவரியில் தொடங்குகிறது சண்டக்கோழி 2!
சண்டக்கோழி 2-வில் இணைந்த சூரி
பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிய ஜித்தன்-2 !
ஜித்தன்-2 படத்தில் நடிக்கிறேனா? விஷால் மறுப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions