ஜித்தன்-2 படத்தில் நடிக்கிறேனா? விஷால் மறுப்பு!

Bookmark and Share

ஜித்தன்-2 படத்தில் நடிக்கிறேனா? விஷால் மறுப்பு!

ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகன் ரமேஷ். ஜித்தன் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், தொடர்ந்த பல படங்களில் நடித்தார். எந்தப்படமும் ஓடவில்லை. எனவே கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.

ஆர்.பி.சௌத்ரியின் இளைய மகனான ஜீவாவோ பல தோல்விப்படங்களில் நடித்தாலும், ஹீரோவாக இன்னமும் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறார். தம்பியின் அளவுக்குக் கூட தன்னால் வர முடியவில்லையே என கவலைப்பட்ட ஜித்தன் ரமேஷ், தனக்கு வெற்றிப்படமாக அமைந்த ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து, அதில் தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க திட்டமிட்டிருந்தார்.

தனக்கு மார்க்கெட் வேல்யூ இல்லை என்பதை உணர்ந்திருந்த ரமேஷ், மார்க்கெட் உள்ள ஒரு ஹீரோவை இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க தீர்மானித்தார். இந்த ஐடியாவை விஷாலிடம் சொல்லி அவரை நடிக்கக்கேட்டிருக்கிறார்.

விஷால் யோசித்து சொல்வதாகச் சொல்ல, அதற்குள் ஜித்தன்-2 படத்தில் விஷால் நடிப்பதாக மீடியாக்களில் செய்தி பரவ ஆரம்பித்துவிட்டது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஷால் ஜித்தன்-2 படத்தில் தான் நடிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.


Post your comment





Related News
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
சண்டக்கோழி 2: பிப்ரவரியில் அடுத்த ரவுண்டு மல்லுக்கட்ட தயாராகும் விஷால்
சண்டக்கோழி 2 என்ன ஆனது?
ஏப்ரல் 8-ல் மீண்டும் பிறக்கும் ‘ஜித்தன் ரமேஷ்’
பிப்ரவரியில் தொடங்குகிறது சண்டக்கோழி 2!
சண்டக்கோழி 2-வில் இணைந்த சூரி
பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிய ஜித்தன்-2 !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions