தடையை மீறி ஜேகே படத்தை வெளியிட்டதற்காக சேரன் மீது ஜெமினி நிறுவனம் வழக்கு

Bookmark and Share

தடையை மீறி ஜேகே படத்தை வெளியிட்டதற்காக சேரன் மீது ஜெமினி நிறுவனம் வழக்கு

ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை மீறி, அந்த படத்தை வெளியிட்டுவிட்டார் என்று இயக்குநர் சேரன் மீது ஜெமினி நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

ஜெமினி இன்டஸ்ட்ரிஸ் இமேஜிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.மனோகர் பிரசாத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தார். அதில், டிரீம் தியேட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் பி.சேரன், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை தயாரிப்பதற்காக எங்கள் நிறுவனத்திடம் இருந்து ரூ.2 கோடி கடன் பெற்றார். கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய பிறகே படத்தை வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்து உத்தரவாதம் அளித்தார்.

ஆனால், எங்களுக்குத் தர வேண்டிய பணத்தை திருப்பித் தராமல், படம் வெளியாகும் தேதியை சேரன் அறிவித்தார். கடன் தொகையை வட்டியுடன் திருப்பித் தராமல் படத்தை வெளியிடுவதற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இதை விசாரித்த நீதிமன்றம், கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல், திரைப்படத்தை வெளியிட கடந்த ஜனவரி 12-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால், கடந்த 7-ஆம் தேதி ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை டிவிடி மூலமாக சேரன் வெளியிட்டார்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் படத்தை அவர் வெளியிட்டுள்ளார். எனவே, சேரன் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதி மனுவுக்கு பதில் அளிக்குமாறு சேரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 


Post your comment





Related News
மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
இயல்பான காதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் நடிகர் ராஜ்கமல்
புதுமுகங்களுடன், "செக்ஸ் பாம்" ஷகிலா முழுக்க, முழுக்க ...குடும்ப பாங்கில் நடிக்கும் "நீ.. நீ... நீதான் வேணும்!"
கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions